நாய்கள் மூலம் மலேரியாவை கண்டறியலாமா? விஞ்ஞானிகள் அளித்த ஆச்சர்ய தகவல் உள்ளே.!

நாய்கள் மூலம் மலேரியாவை கண்டறியலாமா? விஞ்ஞானிகள் அளித்த ஆச்சர்ய தகவல் உள்ளே.!



dogs-findout-the-disease-malaria

நாய்களின் மோப்ப சக்தி மூலமாக மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொசுக்களால் பரவக்கூடியது மலேரியா நோய், இந்த நோயால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருவதாக மேற்கொண்ட தகவல் கூறுகின்றது. 

இந்த மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட  ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் வெளியே தெரிவதில்லை ரத்த பரிசோதனை செய்வதன் மூலமாக மலேரியா நோய் தாக்கியுள்ளதா என்பதை கண்டறிய முடியும். 

இந்நிலையில், நாய்களின் மோப்ப சக்தி மூலமாக மலேரியா நோய் பாதிப்புஏற்பட்டுள்ளதை   கண்டறியலாம் என விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஆய்வு கவுன்சில் நாய்களின் மோப்ப சக்தி மூலமாக மலேரியா நோய் இருப்பதை கண்டறியும் ஆய்வை ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் மேற்கொண்டது. 

அப்போது 5 முதல் 14 வயது வரையிலான, குழந்தைகளின் காலுறைகள் சேகரிக்கப்பட்டு,நாய்களிடம் மோப்ப சக்திக்கு வழங்கப்பட்டது. அதில் 70 சதவிதம் பேருக்கு மலேரியா நோய் இருப்பதை மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன.

எனவே, இந்த நோயை கண்டறிய நாய்களுக்கு சிறப்பு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நாய்களை கொண்டே புற்றுநோய்கள், நீரிழிவு நோயினால் ஏற்படும் கோமா போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.