கொரோனா தடுப்பூசி போடும் போது எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும்.? பிரபல மருத்துவர் விளக்கம்.!

கொரோனா தடுப்பூசி போடும் போது எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும்.? பிரபல மருத்துவர் விளக்கம்.!



doctor talk about corona vaccine

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. தற்போது கொரோனாவை தடுக்கும் முயற்சியாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி கொரோனா தடுப்பூசி திட்டம் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் முதற்கட்டமாக 166 மையங்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஒரு சில நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி போடும் போது என்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது சிலருக்கு தெரியவில்லை. இந்தநிலையில், திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவர்  முகமது ஹக்கீம், சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

coronaஅதில், அலர்ஜி உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், குழந்தைகள், ரத்த தட்டணுக்கள் குறைபாடு உள்ளவர்கள், நாள்பட்ட நோய் உடையவர்கள் தகுந்த ஆலோசனை இல்லாமல் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள கூடாது. அதே போன்று, கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் சில பாதுகாப்பு முறையையும் கடைபிடிக்க வேண்டும்.

தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் பெண்கள் இரு மாதத்திற்கு கர்ப்பம் அடையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மது, புகை பழக்கம் உடையவர்கள், இரண்டு வாரம் முற்றிலும் அதனைத் தவிர்க்க வேண்டும். அதிக நீர் சத்து உடைய காய்கறி கனி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவிற்கு தினமும் தண்ணீர் பருக வேண்டும். தேவையான அளவிற்கு தூக்கம் வேண்டும் என தெரிவித்துள்ளார்