உடல் பருமனால் புற்றுநோய் ஆபத்து? மருத்துவர்கள் சொல்லும் முக்கிய தகவல் இதோ.!



Can Obesity Increase Cancer Risk? Doctors Explain the Hidden Health Dangers

உடல் பருமனுக்கும் - புற்றுநோய்க்கும் சம்பந்தம் உள்ளதா? எதனால் எந்த பாதிப்பு ஏற்படும் என்பதை மருத்துவர்கள் விளக்கி எடுத்துரைக்கின்றனர்.

மரணமும் ஏற்படலாம்:

Obesity and Cancer: உலகம் நவீனமானாலும் நோய்களின் பெயரை கேட்டாலே, அதன் விலையும் - பிற காரணிகளும் அதிர்ச்சியை தரும் வகையிலேயே இருக்கின்றன. அந்த வகையில், புற்றுநோய் பலருக்கும் ஆபத்தானதாக அறியப்படுகிறது. இது பொதுவானது என்றாலும், உடல் பருமன், உடல் பருமன் அதிகரிப்பு போன்ற சாதாரண பிரச்சனையாக எடுத்துக்கொள்ள முடியாது. இதனால் மரணமும் ஏற்படலாம்.

இதையும் படிங்க: Health Warning: நாடி நரம்பில் கலக்கும் சோடியம்… கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்.!

தீங்கு தான்:

பலரும் உடல் பருமன் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகிறது என நம்புகின்றனர். ஆனால், உடல் பருமன் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்தால் புற்றுநோயைப்போல தீங்கு விளைவிக்கும். உடல் பருமன் என்பது எடை அதிகரிப்பு மட்டுமல்லாமல் கடுமையான நோய்க்கும் காரணமாக அமையும். அதனை சரிசெய்ய வில்லை என்றால் புற்றுநோய் ஆபத்தும் அதிகமாகும். 

health tips

பிரச்சனைகள்:

புற்றுநோயைப்போல உடல் பருமனையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் பருமன் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு கல்லீரல், பக்கவாதத்தை ஏற்படுத்தும். இதனால் காலப்போக்கில் பலவகை புற்றுநோய் ஏற்படலாம். பல்வேறு நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்காலத்தில் நவீன வாழ்க்கைக்கு மாறிவரும் நிலையில், உடல் எடை அதிகரிப்பை எதிர்கொள்கின்றனர்.

புற்றுநோய்:

துரித உணவு, நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை, மனஅழுத்தம், உடற்பயிற்சியின்மை காரணமாக உடல் எடை அதிகமாகும். இதனால் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். அதிகப்படியான உடல் கொழுப்பு உடலின் உள்ளுறுப்புகளை பாதிக்கும். வளர்சிதை மாற்றம் கேள்விக்குறியாகும். உடலில் வீக்கம் ஏற்படும். மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும். உடல் பருமன் சிலவகை புற்றுநோய்களுக்கு ஆரம்ப புள்ளி போல அமையும். செல்களின் மாற்றம் அபாயமாகும். மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய்க்கு உடல் எடை காரணம் ஆகும். இவை காலப்போக்கில் மட்டுமே நோயின் தன்மையை வெளிப்படுத்தும். ஏதேனும் சந்தேகம் & பிரச்சனை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் படிங்க: அடிக்கடி தலைவலி வருகிறதா? உஷார்.! இப்போவே கவனிக்கலன்னா.. வருத்தப்படுவீங்க.!