வெறும் தண்ணீர் தானே என நினைக்காதீர்கள்; காலை எழுந்தவுடன் பருகினால் உண்டாகும் நன்மைகளைப் பாருங்கள்!

வெறும் தண்ணீர் தானே என நினைக்காதீர்கள்; காலை எழுந்தவுடன் பருகினால் உண்டாகும் நன்மைகளைப் பாருங்கள்!



Benefits of water

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது.

Benefits of water

அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.

நன்றாக பசியெடுக்க:

Benefits of water
தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும்.தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

குடல் சுத்தமாக:

Benefits of water
உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும்.இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும்.

சோர்வைப் போக்க:

Benefits of water
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது சோர்வடையாமல் எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும்.

அல்சர் வராமல் தடுக்க:

காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.

தலைவலி நீங்க:

Benefits of water
பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும்.

முகம் பொலிவடைய:

Benefits of water
குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.

எடை குறைய:

Benefits of water
எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

இதனைப் படித்து நீங்கள் மட்டும் பயன்பெற்றால் போதுமா! உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள்.