அடேங்கப்பா.. ப்ரோக்கோலி சாப்பிடுவது இவ்வுளவு நன்மைகளா?.. கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த மருந்து.!

அடேங்கப்பா.. ப்ரோக்கோலி சாப்பிடுவது இவ்வுளவு நன்மைகளா?.. கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த மருந்து.!



Benefits of Eating Broccoli Tamil

 

நமது உடலின் ஆரோக்கியமே நமது வாழ்க்கையின் முதல் வெற்றி ஆகும். ஏனெனில் உடலின் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே, நமது இலக்கை நோக்கி நம்மால் பயணிக்க முடியும். நமது உடலுக்கு தேவையான நன்மையை வழங்கும் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று கடைகளில் எளிதாக கிடைக்கும் ப்ரோக்கோலி குறித்த விபரங்களை காணலாம்.

ப்ராக்கோலியில் பொட்டாசியம், நார்சத்து, கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கரோடினாய்டு, சல்போரபேன் போன்றவையும் இருக்கின்றன. ப்ராக்கோலியில் இருக்கும் பூ, இலை, தண்டில் பினாலிக், ஆண்டி-ஆக்சிடென்ட் போன்ற புற்றுநோயை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் இருக்கின்றன. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான போலேட் போன்ற சத்துக்களும் உள்ளன. 

health tips

அதேபோல சர்க்கரையின் அளவை சீராக்கும். கால்சிய குறைபாட்டினை சரி செய்யும். இரத்த அழுத்த பிரச்சனைகள் சரியாகும். இன்சுலின் சுரப்பு மேம்படுத்தப்படும். நார்சத்து உடலின் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. குடலின் ஆரோக்கியம் மேம்பட்டு, செரிமான மண்டலம் சீராகும். உடலின் தேவையற்ற கொழுப்புகள் குறைக்கப்படும். 

நம் மன அழுத்தத்தை குறைக்கும் சல்போர்பேன் ப்ரோக்கோலியில் இருக்கிறது. இரத்த சோகை ஏற்பட்டு இருந்தால், வைட்டமின் சி வழியே இரும்பு சத்து அதிகரிக்கப்பட்டு இரத்த சோகை பிரச்சனை சரி செய்யப்படும். உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். 

health tips

பிரசவக்காலத்தில் இருக்கும் பெண்களுக்கு தேவைப்படும் கால்சியம் ப்ரோக்கோலியில் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் ப்ரோக்கோலி சாப்பிட்டால் குழந்தையின் மூளை ஆரோக்கியம் மேம்படும். ப்ரோக்கோலியை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடுவது நல்லது. ஒருசிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அவர்கள் சாப்பிட வேண்டாம்.