உடலுக்கு தீங்கான ரசாயனத்தை முறித்து, உடல் நலனை பாதுகாக்கும் நாட்டு சர்க்கரை.!

உடலுக்கு தீங்கான ரசாயனத்தை முறித்து, உடல் நலனை பாதுகாக்கும் நாட்டு சர்க்கரை.!


Benefits of Country Sugar or Naattu Sarkarai Tips Tamil

உணவே மருந்து என்று இருந்த நிலைகள் மாறி, மருந்தே உணவு என்ற நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால், இந்த நிலையை உணர்ந்த சிலர், உணவை மருந்தாக எண்ணி வரவும் தொடங்கிவிட்டனர். அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கானது. ஆனால், அதனைத்தான் பலரும் உபயோகம் செய்து வருகிறோம். 

நாட்டு சர்க்கரையில் பல நன்மைகள் உள்ளது. அதனை அதிகளவில் சேர்த்துக்கொண்டு வர, இரத்தத்தில் உள்ள கேடான பொருட்கள் உடலில் இருந்து நீக்கப்படும். வெள்ளை சர்க்கரை இனிப்புகள் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். நாட்டுச்சர்க்கரை மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். 

health tips

நாட்டு சர்க்கரையையும் கரும்பு சாறையும் சேர்த்து குடித்து வந்தால் புற்றுநோய் அபாயம் குறையும். உடலில் ஏற்பட்டுள்ள தொற்றினை எதிர்த்து போராடி, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். வெள்ளை சர்க்கரை கொழுப்புசத்து மற்றும் உடற்பருமன், இதய பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

நாட்டு சர்க்கரையை அன்றாட வாழ்க்கையில் சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையற்ற கொழுப்புகள் குறைக்கப்படும், இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். வெள்ளை சர்க்கரையில் இருக்கும் ரசாயனம் இன்சுலினை பாதித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்தும். நாட்டு சர்க்கரை மேற்கூறிய பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும்.