நான்கு ஆண்டுகளாக நரக வேதனை அனுபவித்த மூத்த சகோதரிக்கு! டார்ச்சல் தாங்க முடியல.... நீதி கேட்ட இளைய சகோதரி! இறுதியில் உயிரைவிட்ட இரு சகோதரிகளும் ..!!!



jodhpur-sisters-suicide-sexual-assault-case

ராஜஸ்தானின் ஜோத்பூர் கிராமப்புற பகுதியில், பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டலால் அடுத்தடுத்து இரண்டு சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூத்த சகோதரியின் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தங்கையும் நீதி கேட்டு போராடியபின் உயிரிழந்துள்ளார்.

தகவலின்படி, இ-மித்ரா சேவை மையம் நடத்தி வந்த மஹிபால் மற்றும் அவரது நண்பர்கள், மூத்த சகோதரியின் தனிப்பட்ட வீடியோக்களை ரகசியமாக பதிவு செய்து, அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளனர். இதன் பின்னணியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காட்டுக்குள் மலம் கழிக்க சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி! உடல் துண்டு துண்டாகக் வெட்டப்பட்ட நிலையில் ..... தூத்துக்குடி அருகே நடந்த கொடூரம்!!!

மார்ச் மாதத்தில் மூத்த சகோதரி தற்கொலை

தொடர்ச்சியான மிரட்டலும் மன அழுத்தமும் காரணமாக, மூத்த சகோதரி கடந்த மார்ச் 20 அன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று இளைய சகோதரி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

அதன்பின், கடந்த ஏப்ரல் 11 அன்று மஹிபால் உட்பட 8 பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகார் கொடுத்த பின்னரும் குற்றவாளிகள் தொடர்ந்து மிரட்டியதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நீர் தொட்டியில் போராட்டம்... பின்னர் விஷம் அருந்திய இளைய சகோதரி

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி, இளைய சகோதரி தண்ணீர் தொட்டியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் மனமுடைந்த நிலையில் அவர் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது.

அவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோதும், வழியிலேயே உயிரிழந்தார். இந்த இரட்டை உயிரிழப்பு சம்பவம் ஜோத்பூர் முழுவதும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

மஹிபால் கைது... காவல்துறையினருக்கும் விசாரணை

இரு சகோதரிகளின் மரணத்திற்குப் பிறகு, மருத்துவமனை முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கு குறித்து பேசிய ஜோத்பூர் காவல் கண்காணிப்பாளர் பி.டி. நித்யா, முக்கிய குற்றவாளியான மஹிபாலும் அவரது கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மற்ற தொடர்புடையவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

 

இதையும் படிங்க: 16 வயதில் திருமணமான இளம்பெண்! கணவர் வீட்டில் நாளுக்கு நாள் நரக வேதனை.... வாந்தி எடுத்த மறுநாளே மரணம்! திருமணமான 2 வருஷத்தில் நேர்ந்த கொடூரம்!!!