16 வயதில் திருமணமான இளம்பெண்! கணவர் வீட்டில் நாளுக்கு நாள் நரக வேதனை.... வாந்தி எடுத்த மறுநாளே மரணம்! திருமணமான 2 வருஷத்தில் நேர்ந்த கொடூரம்!!!
மகாராஷ்டிராவின் புனேவில் 18 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு குறித்து, கணவர் வீட்டார் மீது பெண்ணின் பெற்றோர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர் ஸ்ருதி. இவருக்கும் புத்தபூஷன் என்பவருக்கும் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2024 மார்ச் 28ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது ஸ்ருதிக்கு வயது 16 மட்டுமே என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கட்டிய தாலியில் ஈரம் கூட காயல!! மனைவியை நினைத்து உயிரைவிட்ட கணவன்...
திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட பிரச்சினைகள்
திருமணத்திற்குப் பிறகு சில மாதங்களிலேயே வரதட்சணை கொடுமை தொடங்கியதாக ஸ்ருதியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். உடல் மற்றும் மன ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முயன்றபோது மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, தனிப்பட்ட வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவோம் என கணவர் வீட்டார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன ஸ்ருதி, நீண்ட நாட்களாக அமைதியாகவே இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திடீர் உடல்நலக்குறைவு.. மறுநாளே உயிரிழப்பு
கடந்த மே 4ஆம் தேதி ஸ்ருதிக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மே 5ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து ஸ்ருதியின் பெற்றோர், “இது சாதாரண மரணம் அல்ல. திட்டமிட்டு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர்” என குற்றஞ்சாட்டியுள்ளனர். கணவர், மாமனார், மாமியார் மற்றும் மைத்துனர் மீது அவர்கள் நேரடியாக சந்தேகம் தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணை தீவிரம்
இந்த மரணம் தொடர்பாக போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, இது விஷம் கொடுத்து செய்யப்பட்ட கொலையா அல்லது வேறு காரணமா என்பது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஸ்ருதியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.