அரிய கிரக அமைப்பு! சனி, ராகு, கேது மாற்றத்தால் இந்த 5 ராசிகளுக்கும் அதிஷ்ட காலம்...!!!



rare-planetary-transit-lucky-zodiac-signs

ஜோதிட சாஸ்திரத்தில் அரிதாக நடைபெறும் ஒரு முக்கிய கிரக அமைப்பு தற்போது உருவாகியுள்ளது. சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் தங்களது சொந்த நட்சத்திரங்களான உத்திரட்டாதி, சதயம் மற்றும் மகத்தில் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பது சில ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இந்த கிரக நிலை மாற்றம் குறிப்பாக மேஷம், சிம்மம், கடகம், தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மூன்று முறை நடக்கும் அரிய சூரிய பெயர்ச்சி! இந்த 3 ராசியினர் பண வரவு, பதிவு உயர்வு, ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர்! இனி பொற்காலம் தான்!

மேஷ ராசிக்கு தொழில் முன்னேற்றம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. எதிர்பாராத அளவில் லாப வாய்ப்புகள் கிடைப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

நீண்ட நாட்களாக முடங்கியிருந்த பணிகள் வேகமாக முடிவடையும் சூழல் உருவாகும். மேலும், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சிம்மம், கடகத்திற்கு நிதி யோகம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. வேலை பார்க்கும்வர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம் என்றும், புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடக ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிப்பதுடன், மூதாதையர் சொத்துகள் வழியாக எதிர்பாராத ஆதாயங்களும் கிடைக்கலாம். குடும்பத்தில் நேர்மறையான மாற்றங்களும் ஏற்படும் என கூறப்படுகிறது.

தனுசுக்கு லாபம், மகரத்திற்கு வளர்ச்சி

சனி, ராகு, கேது கிரகங்களின் இந்த அரிய அமைப்பு தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் லாபத்தையும் வருமான உயர்வையும் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறைந்த முயற்சியிலேயே பெரிய பலன்கள் கிடைக்கும் சூழல் உருவாகும் என்றும், ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மகர ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகள் தீரும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகி, வருமானம் படிப்படியாக உயரும் எனக் கூறப்படுகிறது. குடும்ப ஆதரவு அதிகரிப்பதுடன், பரம்பரை சொத்து தொடர்பான சிக்கல்களும் விலகும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சி.... ஜூன் 21 வரை இந்த ராசிகளுக்கு அடித்த அதிஷ்ட மழை! பணத்துக்கு பஞ்சமே இருக்காதாம்...!!!