அடேங்கப்பா.. சோயா பீன்ஸில் இவ்வுளவு நன்மைகளா? சாப்பிடுங்க., சத்துக்களை அள்ளுங்க மக்களே.!
புரதசத்து நிறைந்த உணவுகளில் சோயா பீன்ஸ் முக்கியமானது ஆகும்.
5000 ஆண்டுகளாக..
Soya Beans Nanmaigal: உலகளவில் பரவலாக உட்கொள்ளப்படும் சோயா பீன்ஸில் புரதம், நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி-ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. 5000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து உணவில் இடம்பெற்றுள்ள சோயா பீன்ஸ், மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இது எண்ணெய் வித்துப்பயிராகவும் கவனிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Green Banana: பச்சை வாழைப்பழம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சிக்கோங்க..!
எண்ணற்ற சத்துக்கள்:
சோயா பீன்சின் தாவரவியல் பெயர் கிளைசின்மேக்ஸ் ஆகும். பாபாசியே குடும்பத்தை சேர்ந்த சோயா பீன்சின் மேல் தோல் சாப்பிட ஏற்றது அல்ல. 100 கிராம் அளவுள்ள சோயாவை சாப்பிட்டால் 147 கிராம் கலோரி, 11.05 கிராம் கார்போஹைட்ரேட், 3.55 கிராம் இரும்புசத்து, 4.2 கிராம் நார்சத்து கிடைக்கும், புரதமும் நிறைந்தது. அமினோ-அமிலங்கள் நிறைந்த சோயா பீன்ஸ் தசையின் வளர்ச்சிக்கு நல்லது.

பெண்களுக்கு ஏற்றது:
சோயா பீன்ஸில் இருக்கும் நார்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கும். குடலின் இயக்கத்தை மேம்படுத்தும். மலச்சிக்கலை தடுக்கும். குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாவை வளர்க்கும். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்புரை நோயை தடுக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஹார்மோன் சமநிலையை உறுதி செய்யும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல்-மனரீதியான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
புரதம், நார்சத்து நிறைந்து இருப்பதால் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். அதிகமாக உணவு சாப்பிடும் பழக்கம் தவிர்க்கப்படும். மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் தன்மையும் சோயா பீன்ஸில் உள்ளது.
இதையும் படிங்க: தட்டைப்பயறு சாப்பிடுகிறீர்களா?.. உடலுக்கு கிடைக்கும் அசத்தல் நன்மைகள்.!