Green Banana: பச்சை வாழைப்பழம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சிக்கோங்க..!



Green Banana Benefits Health Benefits, Nutrition and Uses You Should Know

உடலுக்கு பல்வேறு மருத்துவ குணங்களை வாரி வழங்கும் பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இன்று விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

நாம் தினமும் பார்க்கும் வாழைப்பழத்தில் பல வகைகள் இருக்கின்றன. இதில், ஆண்டுதோறும் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உடல் எடை இழப்பு, நீரிழிவு, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இது மருந்தாக செயல்படும். இதனை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

நார்சத்து நிறைந்தது:

அதிக நார்சத்து கொண்ட பச்சை வாழைப்பழம், வயிறு நிரம்பிய உணர்வை தரும். இது அதிக உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்கும். ஆரோக்கியமற்ற உணவுகளையும் நாம் எடுக்க வாய்ப்பை கொடுக்காது. இதனால் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் பச்சை வாழைப்பழம் முக்கிய பங்காற்றுகிறது.

இதையும் படிங்க: அன்னாசி பழத்தில் எக்கச்சக்கமாக கொட்டிக்கிடக்கும் பல நன்மைகள்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...

வயிற்றுப்போக்கு தீர்வு:

வெயில், உடல் உஷ்ணம் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் சிலர் வயிற்றுப்போக்கால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறானவர்கள் பச்சை வாழைப்பழம் சாப்பிட நன்மை உண்டாகும். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வலுசேர்க்கும். வாந்தி, சோர்வு, குமட்டல், தலைவலியை குறைக்கும்.

Health

செரிமானம் எளிதாகும்:

பல உணவுகளை தயாரிக்க பிரதானமாக பயன்படுத்தப்படும் பச்சை வாழைப்பழம் செரிமான அமைப்பை மேம்படுத்தும். செரிமான சிக்கல், அமிலத்தன்மை, வாயு, மலச்சிக்கல் போன்றவற்றை எதிர்கொண்டு, உடலை மேம்படுத்த உதவும். உணவை விரைந்து செரிமானம் அடைய உதவும் என்பதால், வயிற்றில் கனமான உணர்வு தவிர்க்கப்படும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்:

பச்சை வாழைப்பழத்தின் கிளைசெமிக் குறியீடு குறைவு என்பதால், இன்சுலின் ஹார்மோன் மெதுவாக வெளிப்படும். இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும். அதே நேரத்தில் அளவு என்பது மிகமுக்கியம். 

வைட்டமின்கள் கொண்டது:

பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, வைட்டமின் கே போன்றவை உடலின் நொதி செயல்முறைக்கு உதவி செய்யும். வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். வயிற்று உப்பிசம் சரியாகும்.