இவ்வளவு கோடியா? விஜய்யின் GOAT படத்தை அதற்குள் பலகோடி கொடுத்து வாங்கிய பிரபல நிறுவனம்..



zee-network-bought-goat-satellite-rights

விஜய் நடித்துவரும் கோட் (Goat) படத்தின் சேட்டிலைட் உரிமம் மட்டும் பலகோடிகளுக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

GOAT திரைப்படம்:

இயக்குனர்  வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் படம் GOAT அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தளபதி குரலில் விசில் போடு.! 24 மணி நேரத்தில் படைத்த பெரும் சாதனை.! கொண்டாடும் ரசிகர்கள்!!

goat

சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம்:

சயின்ஸ் பிக்ஷன் அடிப்படையில் உருவாகிவரும் படமாக இந்த படம் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், விஜய் தனது அரசியல் வருகையை உறுதி செய்தபிறகு வெளியாக இருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு தற்போதில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

செப்டம்பர் 5ம் தேதி வெளியீடு:

வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்திற்கான விற்பனை தற்போதில் இருந்தே தொடங்கிவிட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சியான ஜீ நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மொழி சேட்டிலைட் உரிமமும் ரூ. 93 கோடிக்கு ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களே ரெடியா? நாளை சம்பவம் உறுதி.. படக்குழு கொடுத்த அசத்தல் அப்டேட்!