தளபதி குரலில் விசில் போடு.! 24 மணி நேரத்தில் படைத்த பெரும் சாதனை.! கொண்டாடும் ரசிகர்கள்!!Whistle podu-song-new-record-breaking-arabic-kuthu-song

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட் (கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார்.

கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான விசில் போடு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. விஜய் பாடியிருந்த இந்த பாடலை ரசிகர்கள் பெருமளவில் வைரலாக்கினர். மேலும் பாடல் வெளியாகி சில விமர்சனங்களையும் சந்தித்தது.

Whistle podu

ஆனாலும் விசில் போடு பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் பெரும் சாதனை படைத்துள்ளது. அதாவது பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக
தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது. அதனை விசில் போடு பாடல் முறியடித்துள்ளது.