சினிமா

அஜித்,விஜய் பற்றி பெருமை பாடும் பிரபல காமெடி நடிகர். அதிகரித்துவரும் ரசிகர் கூட்டம்.

Summary:

yogibabu wish the character of ajith and vijay

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து மாஸ் காட்டக்கூடியவர்கள் அஜித், மற்றும் விஜய் . இவர்கள் இருவருமே தமிழ் திரையுலகின் வசூல் மன்னர்கள் தான். இவர்கள் படங்கள் வெளிவர போகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில்  திருவிழா தான்.

இந்நிலையில் இவர்களுடன் விஜய்யுடன் சர்கார் படத்திலும், அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும்  இணைந்து நடித்தவர் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு. அண்மையில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.

தொடர்புடைய படம்

இந்நிலையில் சமீத்தில் பேட்டி ஒன்றில் பேசிய யோகிபாபு, அஜித், விஜய் குறித்து பேசுகையில், எனக்கு இருவருமே எனக்கு ஒன்று தான். அவர்களை பிரித்து பார்க்க பிடிக்கவில்லை. இருவரிடமும் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. நான் மிகவும் சிறிய நடிகர். ஆனாலும் அவர்கள் என்னை கூப்பிட்டு அருகில் அமரவைத்து அழகு பார்த்தார்கள்.

விஜய் சாருடன் நடிக்கும் போது நான் அவரை கலாய்த்து வசனம் பேசினால் அவர் அதை மனதார ஏற்று சிரித்தார்.

விஸ்வாசம் படத்தில் அஜித் சார் உடன் நடிக்கும் போது அவரை கலாய்த்து ஒரு வசனம். ஆனால் ஆடை பேசுவதற்கு முன் அவரிடம் அண்ணே பேசட்டுமா என தயக்கத்துடன் கேட்டேன்.

அதற்கு அவர் என்ன யோகி இப்புடி கேக்குறீங்க. இது உங்கள் வேலை. பேசுங்க என கூறினார். இதனாலே எனக்கு பெரிய தைரியம் வந்துடுச்சி என யோகி பாபு கூறினார். இவ்வாறு இவர் கூறியது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை ஏற்படுத்தி உள்ளது
 


Advertisement