கண்டெண்ட்டா இருந்தாலும் நியாயம் வேண்டாமா? இளைஞரை அடித்து, மிதித்த விஜே சித்து.. டென்ஷனில் நெட்டிசன்கள்..!



vj-siddhu-delta-food-series-youth-beaten-by-gang


சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களின் வாயிலாக, பலரும் பிரபலமாகிவிட்டனர். அந்த வகையில், வாழ்க்கையின் தொடக்கத்தில் பல கஷ்டங்களை கடந்து வெற்றிபெற்ற நபர் விஜே சித்து. 

இவரின் வீடியோ பலரையும் சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும். சில நேரம் இவரின் சேட்டை எல்லை மீறிய கோபத்தையும் உண்டாக்கும். எனினும், அதுதொடர்பான விஷயம் நடந்து முடிந்ததும், அவர் வம்பிழுத்த நபரை அமைதிப்படுத்திவிடுவார். இவரிடம் சிக்கி மீம் டெம்ப்லேட்டாக உருவாகி, நடிக்க வாய்ப்புகளையும் பெற்றவரில் மறைந்த பிஜிலி ரமேஷ் முக்கியமானவர். 

விஜே சித்து தற்போது தனக்கென யூடியூப் பக்கம் ஒன்றை உருவாக்கி, அதில் தனது பயண விபரங்களை பகிர்ந்து வருகிறார். அவருடன் பயணிக்கும் நபர்கள் அடிக்கும் லூட்டி, பலரும் நட்பு வட்டாரத்திற்குள் இழுத்து சென்று மகிழ்வித்தது. அவ்வப்போது, விஜே சித்து தன்னுடன் இருக்கும் நபர்களை தாக்குவதும் உண்டு. 

இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? 

விஜே சித்து டெல்டா புட் வீடியோ: இந்த வீடியோவில் 12 நிமிடத்திற்கு மேல் இளைஞர் தாக்கப்பட்ட காட்சி இருந்தது. அதனை சில எதிர்ப்பு குரலுக்கு பின்னர் நீக்கி, புதுப்பித்து பதிவேற்றி இருக்கின்றனர். 

 

டெல்டாவில் முகாம்

அவர்கள் வீடியோ பதிவுக்காக தாக்கிக்கொண்டாலும், தங்களுக்குள்ளாக திட்டிக்கொண்டாலும், பின் அடுத்த கணமே அடுத்தகட்ட வேலையை பார்க்க தொடங்கி கடந்து சென்றுவிடுவார்கள். இதனிடையே, விஜே சித்து தற்போது டெல்டா மாவட்டத்தில், டெல்டா புட் சீரிஸ் எனப்படும் டெல்டா உணவு வகைகளை சுவைக்கும் நிகழ்ச்சிக்காக முகாமிட்டு இருக்கிறார். 

இந்த விடியோவின் முதல் பதிப்பில், நிக்கல் - குந்தல் விளையாட்டில், சித்து தன்னுடன் இருக்கும் நபர் ஒருவரை கடுமையாக தாக்கி வீடியோ பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தாக்குவதாக இருந்தாலும் நியாயம் வேண்டாமா? வீடியோவுக்காக இப்படியா? என கண்டனத்தை குவித்தது. இதுதொடர்பான சர்ச்சையில் அவர் தற்போது சிக்கி இருக்கிறார். சிந்துவின் செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறது. 

கண்டென்ட்டுக்காக என கூறியதற்கு பின்னர், கவுண்டன்மணி - செந்தில் காமெடி காட்சிகளை போல ரசித்து கடந்து செல்லாமல், எதற்கு இந்த வீணான வாதம்? என கேள்வி எழுப்பும் நபர்

விஜே சித்து இளைஞரை மிதித்து தாக்கும் காட்சி


இதையும் படிங்க: விடாமுயற்சி திரையரங்கில் தவெக கொடி.. இளைஞரை வெளுத்து அனுப்பிய அஜித் ரசிகர்கள்.! வீடியோ வைரல்.!

விஜே சித்துவின் அலுவலகத்தில் ஒரு நாள் இப்படித்தான் இருக்குமா? என கலகலப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற சந்தானத்தின் காமெடி காட்சியை பகிர்ந்து கேள்வி எழுப்பும் நெட்டிசன்: