நீங்க இங்க வரணும்னு ஆசைப்படுறீங்களா..? முதல்ல இத பாருங்க! பிரபல நாட்டில் இருந்து வீடியோ வெளியிட்ட இந்திய பெண்!



indian-woman-canada-job-reality-video-viral

கனடாவில் வசித்து வரும் இந்திய பெண்மணி கனுபிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்பதைக் கனவாகக் கருதும் பலருக்கும் இந்த வீடியோ உண்மை நிலையை வெளிக்கொணருகிறது.

கனுபிரியா வெளியிட்ட வீடியோவில், வெறும் 5 அல்லது 6 இடங்களுக்கான வேலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது காணப்படுகிறது. இது போன்ற போட்டியைக் காட்டிய கனுபிரியா, “இதற்கே தயாராக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இருக்கலாம்” என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த தெளிவான குரல், கனடாவில் வேலை பெறுவதின் சவாலான உண்மை நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

கனுபிரியாவின் பதிவு பலரது பார்வையை மாற்றியது

இந்த வீடியோ பல நெட்டிசன்களின் அனுபவங்களுடன் ஒத்துபோயுள்ளது. “நான் இருக்கும் நகரத்திலும் இதே நிலைதான்” என்றும், “உண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி” என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொருவர், “கனடா வாய்ப்புகளின் தேசம் என்று நம்பினோம். ஆனால் உண்மையில் வாழ்க்கை சவாலாக இருக்கிறது” எனவும் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: மின்னல் தாக்கிய எலியை விழுங்கும் கருப்பு மாம்பா பாம்பு! இயற்கையின் அதிசய காட்சி...

வெளிநாட்டு  வாழ்க்கை

இந்த வீடியோ, கனவான வெளிநாட்டு வாழ்க்கையின் மறுபக்கம் என்ன என்பதை உணர்த்துகிறது. வேலையைப் பெறும் பயணம் சுலபமல்ல. அதற்காக மனதளவிலும் உடலளவிலும் தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. “இது போன்ற நிலை தெரியாமல் கனடா வந்தால் ஏமாற்றம் தான்தெரியும்” என உணர்த்தும் இந்த வீடியோ, பல இளைஞர்களை நியதிக்கு கொண்டு வந்துள்ளது.

 

இதையும் படிங்க: ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த பெண்கள்! பெண்களுக்கு உதவ வந்தவரின் பரிதாப நிலையை பாருங்க! வைரலாகும் வீடியோ..