விடாமுயற்சி திரையரங்கில் தவெக கொடி.. இளைஞரை வெளுத்து அனுப்பிய அஜித் ரசிகர்கள்.! வீடியோ வைரல்.!



TVK Supporter Beaten by Ajith Fans in Nellai Ram Cinemas 


மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர்கள் அஜித், திரிஷா, ஆரவ் உட்பட பலர் நடிப்பில், அனிரூத் இசையில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகளவில் பல மொழிகளில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அஜித் ரசிகர்கள் படத்தி திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

நெல்லை ராம் திரையரங்கில் சம்பவம்

இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கில், அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இதனிடையே, நேற்று இரவு 11 மணிக்காட்சி திரையிடப்படும் முன், திரையரங்குக்கு வந்தவர்கள் வெளியே இருந்தனர்.

இதையும் படிங்க: தனுஷ் - அருண் விஜய் காம்போவில் இட்லி கடை; வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தவெக கொடி காண்பித்தவர் மீது தாக்குதல்

அப்போது, இளைஞர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை எடுத்து உயர்த்தி காண்பித்த நிலையில், சில ரசிகர்கள் விரைந்து சென்று அவரை தாக்கி, கொடியை தூக்கி எறிந்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு லேசான பரபரப்பு சூழல் உண்டாகியது. ஆனால், சுற்றிலும் அஜித் ரசிகர்களாக இருந்ததால், தவெக கொடி காண்பித்த நபருக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. ஒருசிலர் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

 

இதையும் படிங்க: விரைவில் திரைக்கு வரும் சசிகுமாரின் மை லார்டு திரைப்படம்.. டப்பிங் பணிகள் தொடக்கம்.!