எடப்பாடிக்கு செக் வைத்த சட்டப்பேரவை! 4 MLA-க்கள் ராஜினாமா பின்னணியில் EPS... இந்த நாளில் காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்!!!
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகுமாறு தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். வரவிருக்கும் மேல்விசாரணையில் முன்னாள் முதல்வரிடம் விளக்கம் பெறப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஜினாமா விவகாரத்தில் மேல்விசாரணை
முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகியோரிடம் சட்டப்பேரவைச் செயலகம் முதற்கட்ட விசாரணை நடத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, விவகாரம் தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் விளக்கங்களை பெறுவதற்காக மேல்விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக- வில் அடுத்த அதிர்ச்சி! மேலும் MLA-க்கள் ராஜினாமா?. அரசியலில் அடிக்கும் புதிய புயல்..!!!
எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் ஆஜராகுமாறு சட்டப்பேரவைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்படி, ராஜினாமா செய்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேரிடம் தனித்தனியாக விளக்கம் பெறப்பட உள்ளது.
30-ஆம் தேதி விசாரணை
வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விசாரணையில், ஒவ்வொருவரிடமும் தலா அரை மணி நேரம் சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை தமிழக அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைக்குப் பிறகு வெளியாகும் தகவல்கள் மீது அரசியல் வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: பனையூர் பாபுவால் வெடித்த புது பூகம்பம்... முதல்வர் விஜய் மற்றும் வைகோவை உடனே கைது பண்ணுங்க! அரசியல் வட்டாரத்தில் அடுத்த பரபரப்பு.!!!