பனையூர் பாபுவால் வெடித்த புது பூகம்பம்... முதல்வர் விஜய் மற்றும் வைகோவை உடனே கைது பண்ணுங்க! அரசியல் வட்டாரத்தில் அடுத்த பரபரப்பு.!!!
தமிழக அரசியலில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னாள் திமுக எம்.எல்.ஏ. பனையூர் மு. பாபு புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக வெளியான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, முதல்வர் விஜய் மற்றும் வைகோ மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வைகோவின் கருத்தை சுட்டிக்காட்டிய பனையூர் பாபு
திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் விஜய் கூறியதாக வைகோ தெரிவித்திருப்பதாக குறிப்பிட்ட பனையூர் மு. பாபு, அந்த கருத்தை முக்கிய ஆதாரமாகக் கொண்டு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்
இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் மற்றும் வைகோ ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
மற்றொரு புறம், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், பனையூர் மு. பாபு வெளியிட்டுள்ள கோரிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக MLA-க்கள் திடீர் ராஜினாமா.....இது அரசியல் நடைமுறை அல்ல! மறைமுக ஆதரவு தவெக? போட்டுடைத்த CPM...!!!