காதலனை மறக்க முடியாததால் சோகம்.. கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. மனைவி பரபரப்பு வாக்குமூலம்.!



Delhi Woman Arrested for Allegedly Killing Husband Over Former Lover, Police Say

காதலருடன் பேச இடையூறாக இருக்கும் கணவரை பெண் கொலை செய்தார்.

திருமணம்:

புதுடெல்லியில் உள்ள ஜகட்புரி பகுதியில் வசித்து வருபவர் முஸ்தகீம். இவருக்கும், அலிஷா என்ற 20 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இதனிடையே, அவ்வப்போது கணவன் - மனைவி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சித்தி மகளுடன் கள்ளக்காதல்.. 20 வயது கல்லூரி மாணவி கொலை.. கணவனின் கொடூரம்.. திருவள்ளூரில் பயங்கரம்.!

மரணம்:

சம்பவத்தன்று முஸ்தகீம் இரவு நேரத்தில் உறங்கியபடி இயற்கை எய்தியதாக அலிஷா தகவல் தெரிவித்துள்ளார். இதன்பேரில் நேரில் வந்த உறவினர்கள், முஸ்தகீமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

illegal affair

முன்னாள் காதல்:

விசாரணையின்போது அலிஷாவின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்படவே, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதால் உண்மை அம்பலமானது. அதாவது, அலிஷாவுக்கு திருமணத்துக்கு முன் வேறொரு நபருடன் காதல் உறவு இருந்துள்ளது. இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அலிஷாவின் பெற்றோர், முஸ்தகீமுக்கு அலிஷாவை திருமணம் செய்து வைத்தனர்.

கொலை முயற்சி & கொலை:

திருமணத்துக்கு பின்னரும் கணவருடன் வாழ விருப்பம் இல்லாத அலிஷா, காதலருடன் பேசி வந்துள்ளார். இந்த விஷயத்துக்கு முஸ்தகீம் இடையூறாக இருந்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்னரே கொலை முயற்சி நடந்துள்ளது. ஆனால், அதில் முஸ்தகீம் தப்பிவிட, தற்போது கொலை சம்பவம் நடந்துள்ளது என்பது அம்பலமானது.

இந்த உண்மையை அறிந்த அதிகாரிகள் அலிஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நிச்சயிக்கப்பட்ட இளைஞரை 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொலை.. காதலுக்காக பகீர்.. தொழிலதிபர் பரிதாப மரணம்.!