கோவையில் ஷாக்... காதல் பெயரில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. தவெக நிர்வாகி கைது.. 20 பேருக்கு வலைவீச்சு.!



Coimbatore TVK Functionary Arrested After College Student Alleges Harassment and Assault Attempt

காதல் பெயரில் கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுக்க உடந்தையாக இருந்த தவெக நிர்வாகி உட்பட 3 பேர் பெண் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

காதல் தொல்லை:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை, வழுக்குப்பாறை பகுதியில் வசித்து வருபவர் மணியரசு (வயது 48). இவர் தவெக நிர்வாகி ஆவார். மணியரசுவின் மகன் சூர்யா (வயது 25). இவர் 2 நாட்களுக்கு முன்னதாக, இதே பகுதியில் வசித்து வரும் 19 வயதுடைய கல்லூரி மாணவிக்கு, நண்பர் நரேந்திரனுடன் (வயது 20) சென்று இருசக்கர வாகனத்தில் நடுரோட்டில் காதல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 17 வயது சிறுமி - 19 வயது இளைஞர் ஆணவக்கொலை? சூறையாடப்பட்ட வீடு.. மயிலாடுதுறையில் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு.!

வீடு சூறை:

இதனிடையே, காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர், பின் மாணவியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இந்த விஷயம் குறித்து மாணவி பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததால் பேரில், மாணவியின் தந்தை சூர்யாவை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது கைகலப்பு ஏற்படவே, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க புறப்பட்டனர். இந்த தகவலை அறிந்த சூர்யா, நரேந்திரன் சுமார் 20 பேருடன் மாணவியின் வீட்டுக்குச் சென்று வீட்டை சூறையாடினர்.

Coimbatore

நிர்வாகி மகன் ட்விஸ்ட்:

வீட்டில் இருந்த ரூ.1.5 லட்சம் பணம், 2 கம்மல் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்குப்பின் மணியரசு, சூர்யாவின் தாய்மாமா சந்துரு, பெரியப்பா பிரபு ஆகியோரை கைது செய்தனர். எஞ்சிய 20 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இதனிடையே, தவெக நிர்வாகி மகன் சூர்யா, "மாணவியும் - தானும் காதலித்து வந்தோம். வீட்டில் பிடிக்காத காரணத்தால் காதலை முறித்துக்கொண்டோம். பெண் தான் புதிய போன் வாங்கி எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். அதற்கான ஆடியோ, போட்டோ ஆதாரம் உள்ளது. 

பணம் திருடவில்லை:

சம்பவத்தன்று பெண் என்னை மறித்து காதல் குறித்து பேசினார். எனக்கு விருப்பம் இல்லை என கூறினேன். அவர் அழுதுகொண்டே சென்ற காரணத்தால், அவரின் தந்தை தவறாக நினைத்து என் வீட்டுக்கு வந்து என்னை இரும்பு ராடால் தாக்கினார். ஆத்திரமடைந்த எனது தந்தை நான் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து வீட்டுக்கு சென்று இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினார். நகை, பணம் திருடப்படவில்லை. வீடு சூறையாடப்படவில்லை" என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வேலை இடத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஷாக்.. அதிரடி காட்டிய போலீஸ்.!