17 வயது சிறுமி - 19 வயது இளைஞர் ஆணவக்கொலை? சூறையாடப்பட்ட வீடு.. மயிலாடுதுறையில் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு.!



Mayiladuthurai Horror: Teenage Couple Found Dead, Honor Killing Suspected; 4 Arrested

சிறுமியின் வீட்டார் காதல் ஜோடியை கொலை செய்துள்ளதாக எழுந்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழலால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி - 19 வயது இளைஞர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, புதுப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரின் மகன் பார்த்தீபன் (வயது 19). இவர் கொத்தனார் ஆவார். அப்பகுதியில் உள்ள வேறொரு கிராமத்தில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சிறுமியும் - பார்த்தீபனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்ல தயாராகி வந்துள்ளார்.

இதையும் படிங்க: 21 வயது இளம் பேட்மிட்டன் வீரரின் உயிரை பறித்த காதல்.. சித்ரவதை செய்து நடந்த கொடூரம்? குடும்பத்தினர் கண்ணீர்.!

Crime news

புகார்:

இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. பின் இருதரப்பு குடும்பத்தினர் சண்டையும் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து பொறையாறு காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் அளித்துள்ளார். ஜாதி ரீதியாக இழிவாக பேசி தாக்குதல் நடத்தியதாக கூறி, சிறுமியின் குடும்பத்தினர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை பயன்படுத்தி புகார் பதிவு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Crime news

தற்கொலை ? கொலை ?

இதனிடையே, சாந்தங்குடியில் இருக்கும் குமரவேல் என்பவரின் நிலத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் பார்த்தீபன் - சிறுமி சடலமாக மீட்கப்பட்டனர். இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில், தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இருதரப்பு கிராம மக்களும் குவிந்த நிலையில், பரபரப்பு நிலவியது. இதனிடையே, பார்த்தீபனின் உறவினர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்று வீடு வாசலில் இருந்த பொருட்களை சூறையாடினர். 

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் தந்தை லட்சுமி காந்தன், உறவினர்கள் சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த சிறுமி கொலை.. தாய் & கள்ளக்காதலன் கைது..!