21 வயது இளம் பேட்மிட்டன் வீரரின் உயிரை பறித்த காதல்.. சித்ரவதை செய்து நடந்த கொடூரம்? குடும்பத்தினர் கண்ணீர்.!



21-Year-Old Badminton Player Found Dead in Rajasthan; Family Alleges Torture Over Love

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் அம்பலமாகியுள்ளது.

பேட்மிட்டன் வீரர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிவாடி, சைத்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் மோனு (வயது 21). இவர் பேட்மிட்டன் வீரர் ஆவார். பள்ளியில் மாநில அளவில் விளையாடி இருக்கிறார். பல்வேறு மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். 

இதையும் படிங்க: சொந்த பேத்தியை சீரழித்து கொன்ற தாத்தா.. நெஞ்சை திடுக்கிடவைக்கும் துயரம்.!

காதல்:

இந்நிலையில், இவர் பரீதாபாத், திகாவான் நகரில் வசித்து வரும் சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் கண்டித்து இருக்கின்றனர். காதலில் உறுதியாக இருந்த மோனு, ஒருகட்டத்தில் சிறுமியை அழைத்துக்கொண்டு ஓட்டமும் பிடித்துள்ளார்.

சிறுமி மீட்பு:

இந்த விஷயம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிறுமியின் தந்தை குலபூஷண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் சிறுமியை மீட்டுள்ளனர். ஆனால், அவரின் காதலன் மோனு மாயமாகி இருந்தார். பின் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Crime news

படுகொலை:

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய மோனு மாயமாகிய நிலையில், அவர் நேற்று சிறுமியின் வீட்டுக்கு முன் படுகாயத்துடன் இருந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சித்ரவதை கொலை?

இதுகுறித்து தகவல் அறிந்த மோனுவின் குடும்பத்தினர், சிறுமியின் குடும்பத்தார் மகனை கடத்திச் சென்று சித்ரவதை செய்ததாகவும், இதனால் அவர் உயிரிழந்து இருக்கிறார் என்றும் கூறுகின்றனர். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: 3 வயது சிறுமி நாய் தாக்கி பலி.. 2 நாட்கள் போராடி பிரிந்த உயிர்.. கண்ணீர் சோகம்.!