இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வேலை இடத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஷாக்.. அதிரடி காட்டிய போலீஸ்.!



Tenkasi Congress Leader Arrested Over Alleged Sexual Harassment of Young Woman

Ex காங்கிரஸ் நிர்வாகி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், மருதம்புத்தூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி நாராயணன் (வயது 55). இவர் வழக்கறிஞர் ஆவார். பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஆவார். இதே ஊரில் செயல்பட்டு வரும் மெட்ரிக் பள்ளியின் நிர்வாகியாகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் இருக்கிறார்.

இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவல்துறை அதிகாரி போக்ஸோவில் அதிரடி கைது.!

பாலியல் தொல்லை:

ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் செயல்படும் அரசு உதவிபெறும் சொசைட்டியை நிர்வாகம் செய்து வருகிறார். இந்த சொசைட்டியில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, சம்பவத்தன்று ஹரி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Sexual Harassment

அதிரடி:

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் வீட்டுக்குச் சென்றதும் பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து, இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, ஆலங்குளம் காவல்துறையினர் ஹரி நாராயணனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!