எச்சில் துப்ப முயன்றபோது சோகம்.. தலை துண்டித்து உயிரிழந்த கல்லூரி மாணவர்.. ஓடும் பேருந்தில் ரணகொடூரம்.!



Karnataka College Student Dies After Leaning Out of Moving Bus Window, Head Fatally Struck

ஓடும் பேருந்தில் இருந்து தலையை வெளியே நீட்டி எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டிக்க உயிரிழந்தார்.

கல்லூரி மாணவர்:

17 Year Old Passenger: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி, ஹூப்ளி - லஷ்மேஸ்வரம் பிரதான சாலையில் நேற்று அம்மாநில அரசுப்பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்தில் 17 வயதுடைய ஐடிஐ கல்லூரி மாணவரும் பயணம் செய்தார். மாலை சுமார் 5 மணியளவில் மாணவர் க்ரீஷ் எச்சில் துப்ப நினைத்துள்ளார்.

இதையும் படிங்க: மனைவி வெளியே போன கேப்பில் கள்ளக்காதலியுடன் ஜல்சா.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக்கொலை.!

தலை துண்டிப்பு:

இதற்காக ஜன்னல் வழியே வெளியே தலையை நீட்டிய நிலையில், பின்னாலேயே எம்.சாண்ட் பாரம் ஏற்றிய லாரி வந்துள்ளது. இந்த லாரி பேருந்தை முந்திச்செல்ல முயன்ற நிலையில், மாணவர் தலையை வெளியே நீட்டியதால் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. 

Trending

மரணம்:

இந்த சம்பவத்தில் மாணவர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனால் பேருந்து பயணிகளும் அலறிப்போயினர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து, ரயில், கார் பயணத்தின்போது தலை, சிரம் வெளியே நீட்டக்கூடாது. நமது சிறு அலட்சியமும் எந்த மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சோகம்.

இதையும் படிங்க: தாத்தா, பேரன், பேத்தியின் உயிரைப்பறித்த கோர விபத்து.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.!