நிச்சயிக்கப்பட்ட இளைஞரை 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொலை.. காதலுக்காக பகீர்.. தொழிலதிபர் பரிதாப மரணம்.!



woman-pushes-fianc-into-400-foot-gorge-arrested-along-w

ரியல் எஸ்டேட் அதிபர் மரண வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வருங்கால மனைவியுடன் இன்பச் சுற்றுலா சென்றவர் இறுதிவரை உயிருடன் வீடு திரும்ப இயலாத சோகத்தையும், துரோகத்தின் வலிகளையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருமணம் நிச்சயம்:

Pune Businessman Vishal Agarwal Murder Case: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, ககுஞ்சே பகுதியில் வசித்து வருபவர் கேத்தன் விஷால் அகர்வால் (வயது 26). இவரின் குடும்பத்தினர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் விஷால் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். விஷாலுக்கும் - சியா கோஷல் என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் செய்ய நிச்சியிக்கப்பட்டு இருந்துள்ளது.

இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!

பிறந்தநாளைக் கொண்டாட:

தம்பதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், சியாவின் பிறந்தநாளை கொண்ட புனே ளோனேவாலாவில் இருக்கும் லோகா காட் கோட்டையின் மலைப்பகுதிக்கு வர கேத்தன் விஷாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஜூன் 18ம் தேதி வருங்கால மனைவியின் பிறந்தநாளை கொண்ட கேத்தன் விஷால் அங்கு சென்றுள்ளார்.

Crime news 

தள்ளிவிட்டு கொலை:

இருவரும் மலையேற்றமும் சென்ற நிலையில், இவர்களுடன் நண்பர் ஒருவரும் வந்துள்ளார். விஷால் - சியா மலையின் செங்குத்தான பாறையில் நின்று புகைப்படம் எடுத்த நிலையில், கேத்தன் நிலைதடுமாறி 400 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார் என கூறப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, சியாவின் வாக்குமூலத்தில் அதிகாரிகளுக்கு சந்தேகம் நிலவியுள்ளது.

காதல் ஜோடி கைது:

இதனால் அதிகாரிகள் மாற்று கோணத்தில் விசாரணையை தொடங்கிய நிலையில், பரபரப்பு தகவல் அம்பலமானது. அதாவது, சியா கோஷல் சேத்தன் சௌதாரி (வயது 22) என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், வீட்டில் வேறொருவருடன் நிச்சயம் செய்ததால், சியா தனது காதலர் உதவியுடன் வருங்கால கணவரை திட்டமிட்டு கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து காதல் ஜோடியை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: காதல் திருமணத்தால் கோபம்? மருமகனை காலி செய்த மாமனார்.. வன்மத்துடன் வெறிச்செயல்.!