ஜிம்மில் உடற்பயிற்சி செய்த 35 வயது நபர்! திடீரென சரிந்து கீழே விழுந்து... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

புதுடெல்லி ஃபரிதாபாத் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஜிம்மில் ஏற்பட்ட மரணம், உடற்பயிற்சி பாதுகாப்பு நெறிமுறைகள் மீதான கவனத்தை அதிகரிக்க வைத்துள்ளது. 35 வயதான பங்கஜ் என்ற இளைஞர், ட்ரைசெப்ஸ் நீட்டிப்பு பயிற்சி செய்யும்போது திடீரென விழுந்து உயிரிழந்தார். இந்தக் காட்சி ஜிம்மின் சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்கஜ், செக்டார் 8ல் உள்ள ஸ்ரௌதா ஜிம் மற்றும் வெல்னஸ் கிளப்பிற்கு காலை 10 மணியளவில் வந்தார். அவர், கருப்பு காபி குடித்து பயிற்சி தொடங்கினார். தோள்களுக்கு பயிற்சி அளிக்கவும், மெஷின் பயன்படுத்தினார். 10:20க்கு ட்ரைசெப்ஸ் பயிற்சி செய்த அவர், 2 நிமிடங்களில் திடீரென தரையில் விழுந்தார்.
பங்கஜ் கீழே விழும் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்றொரு பயிற்சி பயனாளர், அவரை அருகில் சென்று பார்த்து உடனே உதவிக்காக மற்றவர்களை அழைத்தார். அனைவரும் சேர்ந்து தண்ணீர் தெளித்து மீட்க முயற்சி செய்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டாலும், மருத்துவர்கள் இறந்துவிட்டார் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: Video : பாம்பு குட்டி ஈனும் அரிய காட்சி! பார்க்கவே மெய்சிலிர்க்குது.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
பயிற்சியாளரின் கருத்தும் முதற்கட்ட விசாரணையும்
பங்கஜின் பயிற்சியாளர் புனீத், “அவர் கட்டுப்பாட்டுடன் பயிற்சி செய்பவர்” எனக் கூறினார். முதற்கட்ட மருத்துவ ஆய்வில் மாரடைப்பு காரணம் எனத் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சிசிடிவி காட்சிகள், நேரில் உள்ள சாட்சிகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
பயிற்சிக்கு முன் மருத்துவ ஆலோசனை மிகவும் அவசியம்
இந்த சம்பவம், உடற்பயிற்சி செய்யும் முன் உடல் நிலை மதிப்பீடு மற்றும் மருத்துவ ஆலோசனையின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டுகிறது. தவறான பயிற்சி முறைகள், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதும் இங்கு வெளிப்படுகிறது.
एक्सरसाइज के दौरान जिम में युवक को आया हार्ट अटैक, वजन कम करने के जुनून में हुई मौत pic.twitter.com/SZlt3pL8l3
— Amandeep Pillania (@APillania) July 2, 2025
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஏறிய பெண்! நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் கிடந்த பெண்! நொடியில் நடந்த அதிசயம்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..