ஓடும் ரயிலில் ஏறிய பெண்! நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் கிடந்த பெண்! நொடியில் நடந்த அதிசயம்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..



nagpur-rpf-saves-woman-from-train-accident

நாக்பூர் ரயில்வே நிலையத்தில், பயணிகளை அதிர்ச்சியடையவைக்கும் வகையில் ஓர் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பெண் பயணி, ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, சமநிலையை இழந்து நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழவிருந்தார்.

கப்பாற்றிய RPF வீரர்

இந்த தருணத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர் தீரஜ் தலால், அந்த பெண்ணை துரிதமாக ஓடி வந்து எழுப்பி உயிரைக் காப்பாற்றினார். சம்பவத்தின் முழு காட்சி RPF அதிகாரப்பூர்வ X (முந்தைய Twitter) பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது.

இந்த சம்பவம் திங்கள்கிழமை மாலை, நாக்பூர் – புனே எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்ற போது நான்காம் பிளாட்பாரத்தில் நடைபெற்றது. மூன்றாவது பாதையில் ஓடி வந்த அந்த பெண், ரயிலில் ஏற முயன்றபோது, அவர் கால்கள் வழுக்கி கீழே விழுந்தார். ஆனால், தீரஜ் தலால் தனது தைரியத்தால் ஒரு பெரிய விபத்தை தவிர்த்தார்.

இதையும் படிங்க: Video: சாலையைக் கடக்க போராடும் ராட்சத பாம்பின் பரிதாப காட்சி! வைரலாகும் வீடியோ...

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு, 'ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா' என்ற திட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியுள்ளதுடன், RPF வீரரின் வீர செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ரயில்வே பயணிகளுக்கான முக்கிய விழிப்புணர்வு

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இது போன்ற சம்பவங்கள் பல்லாயிரக்கணக்கான பயணிகள் இருக்கும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும். ஓடும் ரயிலில் ஏறுவது பாதுகாப்புக்கு மிகப் பெரிய ஆபத்து" என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Video: நாரையின் அசத்தலான வேட்டை! ஒரே முயற்சியில் வெற்றியோடு ராஜநடை போடும் காட்சி! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் காட்சி...