#Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!
வாவ்! நடிகர் விவேக்கா இது! ஹீரோக்களையே மிஞ்சி செம ஸ்மார்ட்டாக அசத்துறாரே! வைரலாகும் மாஸ் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில், தனது காமெடியால் ரசிகர்களை கட்டி இழுத்து முன்னணி காமெடி நடிகராக திகழ்பவர் விவேக். இவர் சின்ன கலைவாணர் என ரசிகர்களால் பெருமையோடு அழைக்கப்படுகிறார்.
மேலும் அசத்தலான கருத்துக்களோடு, காமெடி செய்யும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் தவறியதில்லை.
இந்த நிலையில் நடிகர் விவேக் அவ்வப்போது அசத்தலான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் தற்போது பிளாக் அண்ட் பிளாக் கோட் சூட்டில், கூலிங்கிளாஸ், சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் ஹீரோக்களையே மிஞ்சும் அளவிற்கு செம மாஸாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.