சினிமா

இலங்கை தமிழரை காதலித்து கல்யாணம் செய்த பிரபல சீரியல் நடிகை..! கணவருடன் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் இதோ..!

Summary:

Vijay tv saranya latest photo with husband

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகர் சரண்யா. இந்த தொடர் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தந்தது. தொடர்ந்து ரன் என்ற சீரியல் மூலம் சன் டீவியில் நடித்த இவர் அந்த தொடரில் இருந்து பாதியிலே விலகி மீண்டும் விஜய் டீவிகே சென்றார்.

தற்போது ஆயுத எழுத்து என்று தொடரில் கதாநாயகியாக நடித்துவருகிறார் சரண்யா. இந்நிலையில் தனது கல்லூரி காலத்திலையே இலங்கையை பூர்விகமாக கொண்ட தனது கல்லூரி தோழன் அமுதன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை சரண்யா.

இப்போது அமுதன் லண்டனில் வசித்து வரும் நிலையில் சரண்யா மட்டும் சென்னையிலேயே தங்கி இருந்து தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் வந்த காதலர் தினத்தை காதலித்து கைப்பிடித்த இந்த தம்பதி சேர்ந்து கொண்டாடி உள்ளனர். சரண்யா வெளியிட்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement