சினிமா

தளபதிக்கு தங்கையாக நடிக்கமாட்டேன்! உண்மையை கூறிய விஜய் டிவி பிரபலம்!

Summary:

Vijay tv jaquline talks about actor vijay

தமிழ் சினிமாவின் தளபதி விஜய். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் விஜய்.

பொதுவாக, விஜய்யோடு நடிக்கவேண்டும் என்று பல பிரபலங்கள் கூற நாம் கேட்டிருப்போம். விஜய்க்கு தங்கையாகவாவது நடிக்கவேண்டும் என்று நடிகைகள் கூறுவது உண்டு. சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூட விஜய்யோடு நடிக்க சான்ஸ் வேண்டும் என ஓப்பனாகவே கேட்டிருந்தார்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலளப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி ஜாக்குலின். இவர்  கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருந்த நடித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில்  "நான் விஜய்க்கு தங்கையாக நடிக்கமாட்டேன்" என கூறியுள்ளார். "அவரை என்னால் பாசமாக பார்க்க முடியாது. அழகா இருக்காரே னு சைட் தான் அடிக்க முடியும்" என ஜாக்குலின் கூறியுள்ளார்.


Advertisement