சினிமா

குடும்ப குத்து விளக்கா இருந்தா நம்மா கண்ணம்மாவா இப்படி..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.

Summary:

பாரதி கண்ணம்மா தொடரின் நாயாகி கண்ணம்மாவின் கலக்கலான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி செம வைரலாகிவருகிறது.

பாரதி கண்ணம்மா தொடரின் நாயாகி கண்ணம்மாவின் கலக்கலான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி செம வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சீரியல் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு அமோக வரவேற்பு உள்ளது. அதிலும் இந்த தொடர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானதன் மூலம் TRP யில் பட்டையை கிளப்பியது.

இந்த தொடரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று இந்த தொடரின் நாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துவரும் ரோஷினியும் ஒரு காரணம். இவர் சீரியலுக்கு புதுசு என்றாலும் அதற்கு முன்னதாக பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார் ரோஷினி.

பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு அம்மணி தற்போது தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இந்த தொடரில் மிகவும் அமைதியான பெண்ணாக, எந்த ஒரு கவர்ச்சியும், ஆடம்பரமும் இல்லாமல் நடித்துவரும் இவரின் கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சீரியலில் பார்க்க குடும்ப குத்துவிளக்காக இருக்கும் கண்ணம்மாவா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் செம மாடர்னாக உள்ளார் ரோஷினி. இதோ அந்த புகைப்படங்கள்.

 


Advertisement