தமிழகம் வர்த்தகம் சினிமா

நடிகர் விஜய்சேதுபதிக்கு வந்த பெரும் சோதனை!! 200 பேர் அதிரடி கைது!! மக்கள் செல்வன் சரியான முடிவெடுப்பாரா?

Summary:

vijay sethupathi mandee app got issue

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. அவர் குறுகிய காலத்திலேயே எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி தற்போது சங்கத்தமிழன், கடைசி விவசாயி,  மாமனிதன், உப்பென்னா, ரணசிங்கம்,  ஓ மை கடவுளே, தளபதி 64,  இடம் பொருள் ஏவல் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் விஜய் சேதுபதி திரைப்படம் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் இவ்வாறு அவர் சமீபத்தில் மண்டி என்ற ஆன்லைன் பலசரக்கு செயலி தொடர்பான விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த விளம்பரம் சிறு சில்லரை வியாபாரிகளை பாதிப்பதாகவும், ஆன்லைன் வர்த்தகத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி துணைபோவதாகவும் குற்றம்சாட்டி,தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு  ஆழ்வார் திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

சுமார் 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் கையில் பதாகைகளுடன், விஜய் சேதுபதிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு அவரது அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றுள்ளனர். அப்பொழுது அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement