சினிமா

அட.. நல்லா வளந்துட்டாங்களே! நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா! வைரலாகும் லேட்டஸ்ட் அழகிய புகைப்படம்!!

Summary:

அட.. நல்லா வளந்துட்டாங்களே! நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா! வைரலாகும் லேட்டஸ்ட் அழகிய புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக செம பிசியாக  இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.  இவர் குறுகிய காலத்திலேயே தனது தீராத முயற்சியால் உச்சநிலைக்கு சென்றார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மும்பைக்கார், யாதும் ஊரே யாவரும் கேளீர், மாமனிதன் மற்றும் கடைசி விவசாயி போன்ற படங்கள்  ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் தயாராகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் விஜய் சேதுபதியின் மகள் நன்றாக வளர்ந்து விட்டாரே, அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement