நெருங்கும் பிறந்த நாள்..! இந்த முறை பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்..! ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்..!

நெருங்கும் பிறந்த நாள்..! இந்த முறை பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்..! ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்..!


Vijay ask fans to not celebrate his upcoming birthday

இம்மாதம் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வர உள்ள நிலையில் எந்த ஒரு கொண்டாட்டமும் வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூன்22-ம் தேதி என்றாலே விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமாக அவரின் பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் விஜய்யின் பிறந்த நாள் வர இருக்கும் நிலையில் இந்த முறை பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

vijay

கொரோனா தாக்கம் வீரியமாக அதிகமாகி வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நலன் கருதி விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், நலத்திட்ட உதவிகள் மற்றும் செய்தித்தாள் வாழ்த்து விளம்பரங்கள் என எந்த கொண்டாட்டமும் இல்லாமல் பாதுகாப்பாக இருந்து தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ளுமாறும் விஜய் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் மற்றும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.