தமிழகம் சினிமா

விஜய் அட்லீயுடன் இணையும் கதிர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்.!

Summary:

vijay 63 movie director adlie - actor kathir


விஜய், அட்லீ இணையும் புதிய படத்தில் நடிகர் கதிர், நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தெறி, மெர்சல் வெற்றிப்படங்களை தொடர்ந்து இளையதளபதி விஜய்யின் 63ஆவது படத்தை மீண்டும் அட்லி இயக்க உள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா தேர்வாகியுள்ள நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மதயானைக்கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இளம் நடிகர் கதிர் இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Advertisement