ஏமாற்றம் அடைந்த தனுஷ் ரசிகர்கள்...! காரணம் என்ன தெரியுமா??

ஏமாற்றம் அடைந்த தனுஷ் ரசிகர்கள்...! காரணம் என்ன தெரியுமா??


vetrimaran-meet-press-about-vadachennai

ஏமாற்றம் அடைந்த தனுஷ் ரசிகர்கள்...! காரணம் என்ன தெரியுமா?? 

தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்  வடசென்னை திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெயிலர்  தான் கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக். சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் இந்த டிரெயிலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

வடசென்னை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் மூன்றாவது திரைப்படம். ஏற்கனவே பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் இந்த ஜோடிக்கு இது மூன்றாவது திரைப்படம்.
மேலும் இவர்கள் கூட்டணி நான்காவது முறையாகவும் இணைய போவதாக தகவல் வெளிவந்துள்ளது... 

இந்நிலையில் இந்த படத்தில் கதை என்பதே கிடையாது என இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 
” இது ஒரு நபரைப் பற்றிய கதை அல்ல. உண்மையில் படத்தில் கதை என்பதே கிடையாது. கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், இன்னும் நிறைய சூழ்நிலைகளைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்” என கூறியுள்ளார்.