எப்படி அக்கா இப்படி ஆனீங்க.. எடை குறைந்து செம்ம ஸ்லிம்மாக மாறிய நடிகை வனிதா! புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!!

எப்படி அக்கா இப்படி ஆனீங்க.. எடை குறைந்து செம்ம ஸ்லிம்மாக மாறிய நடிகை வனிதா! புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!!


vanitha weight loss transformation photo viral

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் ஆவார். சில திரைப்படங்களிலேயே நடித்துள்ள அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானார்.

பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார். இதற்கிடையில் அவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து மூன்று மாதத்திலேயே விவாகரத்து பெற்று பலரின் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பிசியாக உள்ளார். மேலும் அவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

இதற்கிடையில் வனிதா அண்மையில் நான்காவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் வனிதா தற்போது தான் உடல் எடை குறைத்துள்ளதாக செம ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதனைக் கண்டு ஆச்சரியமடைந்த ரசிகர்கள் எப்படி அக்கா இப்படி ஒல்லியானீங்க என கேட்டு வருகின்றனர்.