சினிமா

வெளியானது வடசென்னை படத்தின் பாடல் முன்னோட்டம்...! ரசிகர்கள் கொண்டாட்டம்...!

Summary:

vadachennai-movie-song-teaser

வெளியானது வடசென்னை படத்தின் பாடல் முன்னோட்டம்...! ரசிகர்கள் கொண்டாட்டம்...! 

கடந்த மாதங்களில் மட்டும் அதிகமான படங்கள் திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றன. அடுத்தடுத்து திரைக்கு நிறைய படங்கள் வந்தாலும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கும் படம் வடசென்னை என்று கூறலாம்.

வெற்றிமாறன்  இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வடசென்னை'. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா இயக்குநர் அமீர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார். இது இவருடைய 25வது படமாகும். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இப்படம் வருகின்ற அக்டோபர் 17ம் தேதி அன்று வெளியாகிறது.

அந்த வகையில் இன்று இந்த படத்தின் பாடல்கள் முன்னோட்டம் வெளிவரும் என்று அறிவித்திருந்தனர். சொன்னபடியே பாடலின் முன்னோட்டமானது வெளியாகியுள்ளது.


Advertisement