வெளிநாட்டில் வடசென்னை படத்திற்கு கிடைத்த அங்கிகாரம்...! ரசிகர்கள் கொண்டாட்டம்...!

வெளிநாட்டில் வடசென்னை படத்திற்கு கிடைத்த அங்கிகாரம்...! ரசிகர்கள் கொண்டாட்டம்...!


vadachennai-movie-in-china-country

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் படம் வடசென்னை. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட இருக்கிறது. மேலும் இந்த படத்தில் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் மிகவும் முக்கியமான காதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படம் மூன்ற பாகங்களாக உருவாகிக்கொண்டு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் முதல் பாகத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இவை இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது என்று தான் கூற வேண்டும்... இந்நிலையில் இந்த படம் வருகின்ற சரஸ்வதி பூஜையை முன்னிட்டு எதிர்வருகிற அக்டோபர் 17-ஆம் திகதி படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த படம் சீனாவில் பிங்யோ சர்வதேச திரைப்பட விழா வருகின்ற 11-ஆம் தேதி முதல்  20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இந்த விழாவில் பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் வட சென்னை படம் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.