சினிமா

இளைஞர்களை பெரிதும் கவர்ந்த உறியடியின் இரண்டாம் பாகம்; மின்னல் வேகத்தில் முடிந்த படப்பிடிப்பு!

Summary:

Uriyadi 2 shooting over

அறிமுக நடிகர் விஜயகுமார் தயாரித்து, இயக்கி, இசையமைத்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் உறியடி. முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. 

பொருளாதார அளவில் பெரிய வெற்றியடையாவிட்டாலும் கல்லூரி மாணவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் ஓரே பாடல் இடம்பெற்றாலும் "மானே..  மானே.. " என பலரின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமாக 2டி எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இதனையும் விஜய்குமார் இயக்கி நடித்தள்ளார். 

கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லினு.எம் படத்தொகுப்பாளராக பணிபுரிய உள்ளார். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு ஒரே கட்டத்தில் முடிந்துவிட்டது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வெறும் 36  நாட்களில் படத்தை முடித்த படக்குழுவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 


Advertisement