சினிமா

16 வயதில் என்னை கற்பழித்தார்கள்! பிரபல தொகுப்பாளினி பரபரப்பு பேட்டி!

Summary:

TV Anchor says she was raped at the age of sixteen

வெள்ளி திரை அளவிற்கு தற்போது சின்னத்திரையும் வளர்ந்துவிட்டது. அதே சமயம் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தபடுவது மட்டும் குறையவில்லை.

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய வம்சாவளியாக இருந்து தற்போது அமெரிக்காவில் மாடலாக இருப்பவர் பத்மா லட்சுமி. இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளரும் கூட, இந்நிலையில் பத்மா சமீபத்தில் ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு 16 வயது இருக்கும் போது ஒரு இளைஞனால் கற்பழிக்கப்பட்டதாகவும், ஆனால், அந்த நேரத்தில் அதை வெளியே சொல்லும் தைரியம் என்னிடம் இல்லை. அதனால் அந்த விஷயத்தை நான் யாரிடமும் கூறவில்லை என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


Advertisement