சினிமா

உருவாகிறது துப்பாக்கி 2..! ஒளிப்பதிவாளர் போட்ட ஒரு பதிவால் மகிழ்ச்சியின் உச்சத்தில் தளபதி ரசிகர்கள்.!

Summary:

Thuppaki 2 movie latest updates

துப்பாக்கி 2 படம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும்நிலையில் தளபதி ரசிகர்களிடையே இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்றது துப்பாக்கி திரைப்படம். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருப்பார், துப்பாக்கி முதல் பாகத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

இந்நிலையில் துப்பாக்கி 2 விரைவில் தயாராக இருப்பதாகவும், படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த நேரத்தில் ஊரடங்கு காரணமாக அந்த தகவல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், துப்பாக்கி படத்தின் முதல் பாகத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை ஒன்றாக்கி சமீபத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதைத் தான் சந்தோஷ் சிவன் மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பதாக கூறிவருகின்றனர். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement