பத்திரிக்கையாளர் ஒருவரை சரமாரியாக திடீரென திட்டி திணறவைத்தா பிரபல மலையாள சூப்பர் ஸ்டார்! என்ன நடந்தது தெரியுமா?

நடிகர் மோகன் லால் அவர்கள் மலையாள திரையுலகில் உள்ள மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர். இவர் விஸ்வசாந்தி அறக்கட்டளை எனும் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை ஒரு பெரிய தொண்டு நிறுவனம் ஆகும்.
இந்த தொண்டு நிறுவனத்திற்கு நடிகர் மோகன் லால் தான் நிறுவனர் ஆவார்.
இந்த விஸ்வசாந்தி அறக்கட்டளையின் மூலம் கேரள மாநிலத்தில் பல்வேறு சமூகநலச் சேவைகளை நடிகர் மோகன் லால் செய்து வருகிறார்.
மேலும் நடிகர் மோகன் லால் தற்போது அந்த விஸ்வசாந்தி அறக்கட்டளையின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு புதிய மருத்துவமனை ஒன்றை கட்ட திட்டமிடப்பட்டுள்ளார்.
இந்த கேள்வியால் எரிச்சல் அடைந்த மோகன் லால் அந்த செய்தியாளரை கடிந்து கொண்டார்.
நடிகர் மோகன் லால் வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்வது தொடர்பான ஒரு உன்னத நோக்கத்தை பற்றி பேசி கொண்டிருந்தார்.
அந்த சூழ்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் நடிகர் மோகன் லாலை பார்த்து கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியால் எரிச்சல் அடைந்த நடிகர் மோகன் லால் அந்த செய்தியாளரை பார்த்து, நாம் எதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் இடையில் நீங்கள் இது போன்ற அவசியமற்ற கேள்விகளை கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என கேட்டுள்ளார்.
மேலும் நடிகர் மோகன் லால் அந்த செய்தியாளரை பார்த்து வெள்ள நிவாரணத்துக்கும் கன்னியாஸ்திரி புகாருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று எதிர் கேள்வி கேட்டார்.