சினிமா

இதுதான் விஜய் நடித்துவரும் தளபதி 64 படத்தின் கதையா? வெளியே கசிந்த தகவல்.

Summary:

Thalapathy 64 story leaked

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் மூன்று வாரங்களை கடந்து இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தளபதி 64 படத்தின் கதை வெளியே கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்தே இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.

அதிக மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வால் மருத்துவராகும் கனவு நிறைவேறாததால் அனிதா தற்கொலை செய்துகொண்டார். இந்த கதையை மையமாக வைத்து தற்கால கல்வி முறை குறித்து விவாதிப்பதாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் குறித்து படக்குழு எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement