தலைவன் தலைவி திரைப்படம் 6 நாட்களில் எத்தனை கோடி வசூலை பெற்றுள்ளது தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ...



thalaivan-thalaivi-box-office-collection

தமிழ் சினிமாவில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'தலைவன் தலைவி' திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது.

விஜய் சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணி

‘தலைவன் தலைவி’ திரைப்படம், விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம், சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. இதில், நித்யா மேனன், தீபா, செம்பன் வினோத், யோகி பாபு, மைனா, காளி வெங்கட், சென்றாயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் வரவேற்பு

படத்தின் மொழி மற்றும் கதைக்கரு ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால், திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபாதையை நோக்கி பயணித்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால், படம் வெளியான ஆறாவது நாளில் கூட திரையரங்குகளில் நல்லதிரள் கூட்டம் காணப்பட்டது.

இதையும் படிங்க: ரீ-ரிலீசாகி கொண்டாடப்படும் தளபதியின் சச்சின்.! 2 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா??

வசூல் விவரம்

தற்போது கிடைத்த தகவலின்படி, ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஆறு நாட்களில் உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது பாண்டிராஜ் - விஜய் சேதுபதி கூட்டணிக்கான ஒரு முக்கிய வெற்றிக்குறியாகும்.

முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் மாயாஜாலம் மற்றும் பாண்டிராஜின் நம்பகமான இயக்கம் இணைந்ததால், ‘தலைவன் தலைவி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் வெற்றி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: நிஜ வாழ்க்கையில் கோடீஸ்வரியாக வாழும் நடிகை நித்யா மேனன்! சொத்து மதிப்பு இவ்வளவா!