ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யாவின் ரெட்ரோ.! எப்போ தெரியுமா?? வெளிவந்த தகவல்!!
ரீ-ரிலீசாகி கொண்டாடப்படும் தளபதியின் சச்சின்.! 2 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா??

தமிழில் இயக்குநர் ஜான் மஹேந்திரன் இயக்கத்தில் தளபதி விஜய்யின் துள்ளலான நடிப்பில் 2005ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற கலகலப்பான திரைப்படம் சச்சின். இப்படத்தில் ஹீரோயினாக விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா நடித்திருந்தார்.
மேலும் வடிவேலு, சந்தானம், ரகுவரன், பிபாசா பாசு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
ரசிகர்களை கவர்ந்த சச்சின்
மேலும் சச்சின் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டானது. மேலும் விஜய் மற்றும் வடிவேலு கூட்டணியில் காமெடிகள் காட்சிகள், காதல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது.
இதையும் படிங்க: தாறுமாறு.. பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் குட் பேட் அக்லி.! 5 நாட்களில் மட்டும் இவ்வளவு வசூலா??
ரீ- ரிலீசான சச்சின்
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சச்சின் திரைப்படம் கடந்த ஏப்ரல் 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. படம் வெளியாகி முதல் நாளிலேயே 1.9 கோடி வசூல் செய்தது. மேலும் 2 நாட்களில் ரூ.4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அரசியல் குடும்பத்தில் இணைந்த பிரியங்கா.! அவரது கணவர் குறித்து வெளிவந்த முக்கிய பின்னணி!!