நடிகை தமன்னாவின் குடும்பத்தையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா! வருத்தத்துடன் அவரே வெளியிட்ட ஷாக் தகவல்!



tamanna-parents-got-corono-positive

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரதாண்டவமாடி வருகிறது.  மேலும் ஒவ்வொரு நாளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.

மேலும் இந்த கொரோனா தொற்றால் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை தமன்னா தனது அம்மா மற்றும் அப்பா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

tamanna

மேலும் தமன்னாவிற்கும் அவரது வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொண்டதில் அனைவருக்கும் ரிசல்ட் நெகடிவ் என வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமன்னாவின் பெற்றோர்கள் விரைவில் குணமடைந்து மீண்டு வரவேண்டுமென பலரும் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.