
Susanth and actress riya living together
நடிகர் சுஷாந்த்தை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தது உண்மைதான் எனவும், திருமணத்திற்கு முன்பே நாங்கள் இருவரும் ஒன்றாக வாழந்ததாகவும் நடிகை ரியா ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் இதுவரை மும்பை போலீசார் 13 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் நடிகர் சுஷாந்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய 9 மணி நேர விசாரணையில் நடிகை ரியா சக்ரபோர்த்தி பல்வேறு தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளார். அதில், சுஷாந்தை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தது உண்மை தான் எனவும், திருமணத்திற்க்கு முன்பே இருவரும் ஒன்றாக வாழ்ந்ததாகவும், வரும் நவம்பரில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், சமீபத்தில் இருவரும் சண்டைபோட்டு பிரிந்திவிட்டதாகவும் ரியா போலீசாரிடம் கூறியுள்ளார். ரியாவின் செல்போனை போலீசார் சோதனை செய்ததில் இருவரும் பேசிக்கொண்டது, புகைப்படங்களை பகிர்ந்துகொண்டது, சாட் செய்தது தெரிய வந்துள்ளது.
இருவரும் சண்டைபோட்டு பிரிந்தாலும், தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் சுஷாந்த், ரியாவிடம் பேசி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement