படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. ரசிகர்களுக்காக இணைத்தில் பதிவிட்ட சூர்யா.?

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. ரசிகர்களுக்காக இணைத்தில் பதிவிட்ட சூர்யா.?



Surya twitter post viral

1997ம் ஆண்டு "நேருக்கு நேர்" திரைப்படத்தில் அறிமுகமானவர் சூர்யா. தொடர்ந்து நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆறு, வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மௌனம் பேசியதே, ஆதவன், அயன், கஜினி, சில்லுனு ஒரு காதல், மாற்றான், அஞ்சான் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

surya

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருக்கும் சூர்யா, தமிழக அரசின் விருதுகள், எடிசன் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கும் "கங்குவா" திஹ்ரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

யூ வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உட்பட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ பி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

surya

இந்நிலையில் நேற்று படப்பிடிப்பில் ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சூர்யா தனது வலைதளப் பக்கத்தில் "அன்பான ரசிகர்களே நான் நலமடைய வேண்டி நீங்கள் அனுப்பிய மெசேஜ்களுக்கு நன்றி. நான் நலமாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.